செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2024 (13:33 IST)

இந்தியா - இலங்கை இடையே பாலம் வேண்டாம்: இலங்கை கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் கருத்து

இந்தியா - இலங்கை இடையே பாலம் வேண்டாம் என்றும் பாலம் அமைத்தால் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து என்றும் இலங்கை கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் என்பவர் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியாவின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே கடல்வழி பாலம் அமைக்க இந்திய, இலங்கை அரசுகள் திட்டம் அமைத்து வரும் நிலையில் இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் கூறினார்.
 
இந்த நிலையில் இலங்கை கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் இது குறித்து கூறிய போது பல நூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய மன்னர்கள் இலங்கைக்கு படையெடுத்து சில பகுதிகளை ஆக்கிரமித்தனர். அந்த பகுதிகளை மீட்க இலங்கை மன்னர்கள் மிகுந்த கஷ்டப்பட்டனர்.
 
எனவே இந்தியா - இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்கு பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமின்றி இலங்கை தமிழ்நாட்டில் ஒரு பகுதியாக மாறும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பாலம் அமைக்க இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva