வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (16:02 IST)

எனக்கும் ரன்பீருக்கும் திருமணம் முடிந்துவிட்டது - ரகசியம் உடைத்த ஆலியா!

தனது சமீபத்திய பேட்டியில் ஆலியா பட், எனது திருமண ஏற்பாடுகளை இந்த கொரோனா பரவல் பாழக்கிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். 

 
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இவர் வலம் வருகிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமாவார் ஆலியா பட்.. தற்போது இவர் கங்குபாய் கத்தியவாடி எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படன் வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில் ஆலியா பட், எனது திருமண ஏற்பாடுகளை இந்த கொரோனா பரவல் பாழக்கிவிட்டது. எனினும், பல வருடங்களுக்கு முன்பே எனக்கும், ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது. எல்லாமே ஒரு காரணத்திற்காகவே நடக்கும். நாங்கள் எப்போது திருமணம் செய்கிறோமோ, அது சரியாகவும் அழகாகவும் நடக்கும்  என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக கொரோனா தொற்றுநோய் ஊரடங்கு மட்டும் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், ஆலியாவுக்கும், எனக்கும் இந்நேரம் திருமணம் முடிந்திருக்கும் என்று ரன்பீர் கபூர் தெரிவித்திருந்தார். ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.