1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (09:11 IST)

40க்கு மேலாகியும் முரட்டு சிங்கிள்! கல்யாணத்திற்கு ஏங்கிய டிரைவர் தற்கொலை!

நாகர்கோவில் அருகே திருமணமாகாத விரக்தியில் டிரைவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த கிருஷ்ண பெருமாள் என்பவரது மகன் தங்கலிங்கம். 43 வயதாகும் தங்கலிங்கம் அப்பகுதியில் ஒரு மினி டெம்போ வாகன ஓட்டி வந்துள்ளார். தங்கலிங்கத்திற்கு பல ஆண்டுகளாக உறவினர்கள் திருமணத்திற்கு பெண் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த தங்கலிங்கம் அடிக்கடி மது அருந்த தொடங்கியுள்ளார். சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வீட்டில் படுத்திருந்த தங்கலிங்கம் காணாமல் போனதால் உறவினர்கள் எல்லா பக்கமும் தேடியுள்ளனர். அப்போது மரம் ஒன்றில் தங்கலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் திருமணமாகாத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.