1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (15:23 IST)

இயக்குனர் அஸ்வின் சரவணன் திருமணம்!

மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மாயா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அஸ்வின் குமார். அதன் பிறகு அவர் இயக்கத்தில் டாப்ஸி நடித்த கேம் ஓவர் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று அஸ்வின் சரவணன் அவரது நீண்டநாள் காதலியும் எழுத்தாளருமான காவ்யாவை மணந்துள்ளார்.  இதுகுறித்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.