Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை… ஆனாலும் கவனம் ஈர்த்த சாணிக்காயிதம் இயக்குனர்!

Updated: திங்கள், 16 நவம்பர் 2020 (11:01 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணிக் காயிதம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னால் இயக்குனர் செல்வராகவன் தான் ஒரு படத்தில் நடிக்கபோவதாக அறிவித்த போதே அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. செல்வராகவன் போன்ற தேர்ந்த இயக்குனரை தன் கதையின் மூலம் நடிக்க சம்மதிக்க வைத்த அந்த இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. அந்த இயக்குனர் இதற்கு முன்னர் ராக்கி என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சாணிக்காயிதம் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் குற்றவாளிகள் போல உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். இந்த போஸ்டர் ரசிகர்களை மட்டும் இல்லாமல் சினிமா உலக பிரபலங்கள் பலருக்கும் பிடித்திருந்தது. அதனால் சமுகவலைதளங்களில் பரவலான பாராட்டுகளைப் பெற்றன.

இந்த போஸ்டரால் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இவர் இயக்கிய ராக்கி படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் ஆகியவையும் இது போல சமுகவலைதளங்களில் கவனம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் அந்த திரைப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

எல்லாம் காட்டு

ஷங்கருக்கு No சொன்ன தனுஷ்!.. பிரம்மாண்ட இயக்குனரோட நிலைமை இப்படி ஆகிப்போச்சே!..

2 நாட்களில் 100 கோடி வசூல்!... பாக்ஸ் ஆபிசில் கலக்கும் Spider Man Brand New Day!..

சி.எம் பையன்!.. அதை மைண்ட்ல இருந்து எடுத்துடுங்க!.. ஜேசன் சஞ்சய் ராக்ஸ்...

9 நாட்களில் ஜன நாயகன் வசூல் இவ்வளவுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments