ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (10:49 IST)

பிஸ்கோத் இயக்குனருடன் மீண்டும் இணையும் சந்தானம்- தியேட்டர் வாசலில் அறிவிப்பு!

பிஸ்கோத் படத்தின் இயக்குனர் ஆர் கண்ணன் தனது அடுத்த படமும் சந்தானத்தை வைத்துதான் இயக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன நடிகர் சந்தானம் பல படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ’டகால்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ஆனாலும் அந்த படத்தை பற்றிய நேர்மறையான விமர்சனங்கள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் இந்த படம் ஓடும் திரையரங்குகளுக்கு நடிகர் சந்தானமும் இயக்குனர் கண்ணனும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

தியேட்டர் வாசலில் பேசிய இயக்குனர் கண்ணான் ‘சந்தானம் இல்லாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்க முடியாது. தியேட்டர் ரிலீஸ் என்று கடைசி நேரத்தில் முடிவானதும் பொருளாதார பிரச்சனைகள் எழுந்தன. அதை சந்தானம் தான் சரிசெய்தார். என் அடுத்தபடமும் சந்தானத்தை வைத்துதான் இயக்க உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.