Daily Horoscope
✕

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘அர்ஜுன் ரெட்டி’

Written By CM
Updated: சனி, 12 மே 2018 (18:41 IST)
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’, ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடித்திருந்தார். சந்தீப் வங்கா படத்தை இயக்கியிருந்தார். இளைஞர்களைக் கவர்ந்த இந்தப் படம், வசூலில் சக்கை போடு போட்டது.
 
எனவே, இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டி நிலவியது. ஹிந்தியில் அர்ஜுன் கபூர் அல்லது ரன்வீர் சிங் நடிக்கலாம் எனப் பேச்சுகிளம்பியது. சந்தீப்பே ஹிந்தியிலும் இயக்க, முரத் கெதானி தயாரிக்க இருக்கிறார்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா கேரக்டரில் நடிக்க ஷாகித் கபூர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவலை, சந்தீப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழில் இந்தப் படம் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. பாலா இயக்க, த்ருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

எல்லாம் காட்டு

2 சர்வதேச விருதுகளுக்கு போட்டி போடும் ராமாயாணா... தி ஓடிஸி படத்துடன் கடும் போட்டி...

விருது வழங்கிய முதல் இந்தியர்!.. அமெரிக்காவில் கொடி நாட்டிய விஜய் சேதுபதி...

ராமர் அரக்கர்களுக்கு பயந்து ஓடினாரா? ராமாயணம் திரைப்பட குழுவினர் மீது புகார்.

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவேன்.. எலிமினேட் ஆன முகேஷ் பேட்டி...

மைசாவா மாறிடுவேன்!... ரசிகர்களுக்கு வார்னிங் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!.

அடுத்த கட்டுரையில்
Show comments