1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (19:19 IST)

எல்லா துறைகளிலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது - பிரபல நடிகை

நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடிகை எல்லா துறைகளிலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக, சினிமாவில் பட வாய்ப்பிற்காக தங்களை படுக்கைக்கு அழைத்தனர் என பல நடிகைகள் புகார் கூறி வருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த விஷயத்தை பூதாகரமாக்கியுள்ளார். 
 
இந்நிலையில் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியான அடா சர்மா பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது என்றும் சினிமாத் துறை என்பதனால் இதை பெரிது படுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
 
கேவலமான புத்தி உள்ளவர்கள் பெண்களை அழைக்கத்தான் செய்வார்கள். அதற்கு சம்மதிப்பதும், எதிர்ப்பதும் அவரவர் சொந்த முடிவு. திறமை இருந்தால் யாருக்கும் அடிபணிய அவசியம் தேவயில்லை என்றார்.
பெற்றோர்கள் பெண் பிள்ளைகள் வெளியே போனால் பார்த்து போ, தெரியாதவரிடம் பேசாதே என்று அறிவுரை கூறுகிறார்கள். அதேபோல் ஆண் பிள்ளைகளிடமும் பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து வளர்த்தால் பாலியல் வன்மங்களே ஏற்படாது என கூறியிருக்கிறார்.