திருநங்கையாக மிரட்ட வரும் சூப்பர் ஸ்டார்! காரணம் லாரன்ஸ்!
தமிழ் திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.
அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும் பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும் லாரன்ஸ் வெறித்தனமாக நடித்து உள்ளார்.
திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான காஞ்சனா பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் காஞ்சனா 3 படம் வசூலில் சாதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால், தமிழ், தெலுங்கை தொடர்ந்து தற்போது காஞ்சனா திரைப்படத்தை இந்தியில் அக்சய் குமாரை வைத்து இயக்கவுள்ளார் லாரன்ஸ். கடந்த 2011ம் ஆண்டு தமிழில் வெளியான காஞ்சனா படத்தில் சரத் குமார் ஒரு திருநங்கையாக நடித்திருப்பார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் இந்தியில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இப்படத்திற்கு லாக்ஸ்மி பாம்ப் (Laaxmi Bomb) எனவும் பெயரிட்டுள்ளனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனே தனது 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இதுவரை திருநங்கையாக நடித்ததே இல்லை. தற்போது அவர் இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது பலரையும் ஆச்சர்ய படுத்தியுள்ளது. அவரின் இந்த துணிச்சலுக்கு லாரன்ஸின் வெற்றியே காரணம் என்கிறது சினிமா வட்டாரம்.