புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By vm
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (13:28 IST)

காஞ்சனா ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருக்கு ஜோடி இவரா?

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா திரைப்படம் தமிழில் பெரிய அளவில் ஹிட்டானது. 


 
கடந்த 2011ஆம் ஆண்டு  ராகவா லாரன்ஸ்,  சரத்குமார், கோவை சரளா , லட்சுமி ராய்,  ஆகியோரது  நடிப்பில் வெளியாகி இருந்தது .
 
பேய் கதைகளை நகைச்சுவை பாணியில் சொல்லி இந்தப் படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் ராகவா லாரன்ஸ் . பேய் படம் என்றாலே ராகவா லாரன்ஸ் எடுக்கும் படம் தான் என்ற அளவுக்கு காஞ்சனா படம் பிரபலமானது .  இதைக் கேள்விப்பட்டு பாலிவுட்டில் காஞ்சனா படத்தை எடுத்து வாருங்கள் என ராகவா லாரன்சுக்கு அழைப்பு வந்தது. அதுவும் யாரிடம் தெரியுமா ?ஹிந்தி பட உலக சூப்பர் ஸ்டார் அக்ஷய குமாரிடமிருந்து... உடனே பறந்து சம்மதம் சொன்னார் ராகவா லாரன்ஸ். தற்போது படத்திற்கான கலைஞர்கள் மற்றும் நடிகைகள் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. காஞ்சனா ஹிந்தி ரீமேக் படத்துக்கு மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக பரத் அனே நேனு  படத்தில் நடித்த கியாரா அத்வானி நடிக்க உள்ளார். 
 
தமிழில் வெளியான காஞ்சனா படம் அப்படியே ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட வில்லை. மாறாக கதையில் பழிவாங்கும் வகையில்  மாற்றப்பட்டுள்ளது.