1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Nutrition in Red banana and its uses...!!

செவ்வாழையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்....!!

செவ்வாழை
செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் எ, புரதம் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலிற்கு முக்கிய தேவையான  கரையும் நார்ச்சத்து ஆகும்.
செவ்வாழையில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உங்களுக்கு சிறுநீரக கற்கள், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்று நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
 
தினமும் ஒரு செவ்வாழை பழம் உண்டு வருபவர்களுக்கு இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினை வராமல் தடுக்கும். நமது சருமம், முடி, மூட்டு மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஒரு செவ்வாயில் தினமும் தேவையான அளவில் 16%  வைட்டமின் சி நிறைந்துள்ளது.
 
செவ்வாழையில் இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை, இரத்த குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல்  தடுக்கும்.
 
தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இளமையான மற்றும் மின்னும் சருமம் கிடைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
 
செவ்வாழையில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது.இதனை நீங்கள் உண்டுவந்தால் உங்களின் கண் ஆரோக்கியம் மேம்படும். மேலும் உங்களுக்கு பார்வை கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்பார்வை திறனை அதிகரிக்கும்.
 
வாழை பழத்திற்கு  உண்டவுடன் உடலிற்கு உடனடி சக்தி அளிக்கக்கூடிய சக்தி உண்டு. விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு தங்களின் வேலையினை தொடர்ந்தால் அவர்களின்  செயல்திறன் அதிகரிக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் சிலவகை காய்கறிகள் என்ன தெரியுமா...?