புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (10:31 IST)

உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை மீண்டும் நிறுத்தப்பட்டது – வேதாரண்யத்தில் பதட்டம் நீங்குமா ?

வேதாரண்யத்தில் நேற்று இரண்டு தரப்பினர் இடையே நடந்த மோதலில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்குப் பதிலாக இன்று புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் நேற்று ஒருவர் ஜீப்பில் வந்தபோது சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளார். இந்த விபத்து காரணமாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு அந்த காரை எரித்துள்ளனர் சிலர். இதனையடுத்து ஒரு பிரிவினர் அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை உடைத்தனர். இதனை தடுக்க வந்த போலீசார் மீதும் போலீஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. காவலர்கள் வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சென்றுவிட்டதால் காவல்நிலையத்தில் இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு வேதாரண்யம் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இந்த சிலை உடைப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் விவாதப் பொருளாக மாற தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக புதிய வென்கல சிலை இன்று அதேப் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.