1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 25 ஜனவரி 2020 (18:32 IST)

கொரோனா வைரஸ் மரணங்களுடன் துவங்கிய எலி ஆண்டு!

கொரோனா வைரஸ் மரணங்களுடன் தொடங்கிய சீனப் புத்தாண்டை மக்கள் கொண்டாடமல் உள்ளனர். 
 
சீனாவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸால் ஹூபே மாகாணத்தில் மட்டும் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதுவரை இந்த வைரஸ் உண்டாக்கிய நோய் தொற்றால் சீனா முழுவதும் 41 பேர் இறந்திருப்பதும், 1287 பேர் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதம் முதல் முறையாக இந்த வைரஸ் பரவத் தொடங்கியது.
 
வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். வுஹான் நகரில் பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நகரில் புதிய மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.
 
இது சீனப் புத்தாண்டு சமயம், எனவே பலர் தங்கள் வீடுகளுக்கு பயணம் செய்வது வழக்கம். ஆனால் ஹூபே மாகாணத்தில் பலர் இந்த புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை.
போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதுடன் வுஹானில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இன்று சீனப் புத்தாண்டு தினம். 15 பௌர்ணமிகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்தப் புத்தாண்டுக்கு குறிப்பிட்ட எந்தத் தேதியும் கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு விலங்கின் பெயரால் இது அழைக்கப்படும். இந்த ஆண்டுக்கு 'எலி ஆண்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது.