திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (18:09 IST)

தனி நபர் உரிமைகளை மீறும் விக்கிலீக்ஸ்: விசாரணையில் தகவல்

அரசின் தவறுகளை வெளிக்காட்டுவதற்கான விக்கிலீக்ஸின் பிரசாரத்தில், நூற்றுக்கணக்கான அப்பாவி தனிநபர்களின் தனியுரிமைகளில் தலையீடு செய்யப்பட்டுள்ளது.
 

 
அதில் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து மீண்டு வந்தவர்கள், உடல்நலம் குன்றிய குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரும் அடங்குவர் என விசாரணை ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
 
ஒரு பாலினச் சேர்க்கையாளராக இருந்ததற்காக சவுதியில் கைது செய்யபட்டவுருடன் சேர்த்து இரண்டு பதின்ம வயது பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டட்டவர்களின் அடையாளமும் வெளியிடப்பட்டது என அசோசியேடட் பிரஸின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஒரு பாலினச் சேர்க்கை சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாக விக்கிலீக்ஸிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
 
போர் தொடர்பான, தணிக்கை செய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட செய்திகளை வெளிக்கொண்டு வருதல், உளவு பார்த்தல் மற்றும் ஊழல்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருவதே அதன் அடிப்படை நோக்கமாக கூறப்பட்டது.