1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2024 (21:25 IST)

ராமர் கோவில் பற்றி பாகிஸ்தான் மக்கள் கூறுவது என்ன?

ram temple
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது குறித்து பாகிஸ்தானில் உள்ள சாமானியர்களில் இருந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் எதிர்வினைகள் காணப்படுகின்றன.
 
ராமர் கோவில் திறப்பு விழாவிற்குப் பின்னர், பாகிஸ்தான் அரசு இந்நிகழ்ச்சிக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
 
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “பல நூற்றாண்டுகள் பழமையான மசூதியை 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தீவிரவாத கும்பல் இடித்தது. இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தண்டிக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. மாறாக, இடிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது,” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் அரசின் இந்த எதிர்வினை குறித்து அந்நாட்டின் அனைத்து செய்தித்தாள்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இதனுடன், பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் இது தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
 
ராமர் கோவில் பற்றி பாகிஸ்தான் அரசு சொன்னது என்ன?
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், “அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அங்கு ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டதை பாகிஸ்தான் கண்டிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
"பல நூற்றாண்டுகள் பழமையான மசூதி 6 டிசம்பர் 1992 அன்று வன்முறைக் கும்பலால் இடிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்திய உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்தது மட்டுமல்லாமல், மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்டவும் அனுமதித்தது.
 
கடந்த 31 வருட நிகழ்வுகள் இன்று உயிருக்கு ஆபத்தான விளைவுகளை எட்டியுள்ளன. அவை இந்தியாவில் வளர்ந்து வரும் பெரும்பான்மைவாதத்தை சுட்டிக்காட்டுகின்றன. அவை இந்திய முஸ்லிம்களை அரசியல் மற்றும் சமூக ரீதியாக ஓரங்கட்டுவதற்கான முயற்சிகளை பிரதிபலிக்கின்றன.
 
இடிக்கப்பட்ட மசூதி இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோவில், இந்திய ஜனநாயகத்தில் நீண்ட காலத்துக்கு ஒரு கறையாக இருக்கும். இடிக்கும் ஆபத்தில் வாரணாசியின் ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி இத்கா உள்ளிட்ட மசூதிகளின் பட்டியல் அதிகரித்து வருகிறது.
 
இந்தியாவில் அதிகரித்து வரும் 'ஹிந்துத்வா' சித்தாந்தத்தின் அலை மத நல்லிணக்கம் மற்றும் பிராந்திய அமைதிக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகள், வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்களை சர்வதேச சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் தீவிரவாத குழுக்களிடமிருந்து இஸ்லாமிய பாரம்பரிய தளங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் நாம் நமது பங்கை ஆற்ற வேண்டும்."
 
பாகிஸ்தானின் சமூக ஊடகப் பயனாளர் ஜமில் பலோச் தமது X பக்கத்தில், “ஒரு காலத்தில் முகமது பின் காசிம், கௌரி, கஸ்னவி மற்றும் ஆலம்கிர் போன்ற ஆட்சியாளர்கள் நமக்கு இருந்திருப்பது வெட்கக்கேடான விஷயம். பாபர் மசூதியை இடித்து அதன் நிலத்தில் கோவில் கட்ட மோதியை அனுமதித்த கோழைகள் இன்று நம்மை ஆள்கின்றனர்,” என எழுதியுள்ளார்.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
ஹரிஸ் தார் என்ற நபர் தமது X பக்கத்தில், “இந்திய அரசின் அனுசரணையில் பாபர் மசூதிக்குப் பதிலாக ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம், இந்தியா ஒரு இந்து நாடாக மாறியுள்ளது என்பது மீண்டும் ஒருமுறை தெளிவாகத் தெரிகிறது. இந்திய முஸ்லிம்களுக்கு என தனியாக ஒரு அரசியல் கட்சி தேவை,” என எழுதியுள்ளார்.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
நோஷி சட்டி என்ற X தள பயனர் தமது பக்கத்தில், "பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அதுவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று அழைக்கப்படும் ஒரு நாட்டில் இது போல் கட்டப்படுவது முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு இருண்ட நாள்," என எழுதியுள்ளார்.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ரஹீம் நாசர் தமது X பக்கத்தில், “மதத் தீவிரவாதம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இந்துக்கள் மத்தியில் உள்ள தீவிர தேசியவாதிகள் இந்தியாவை அராஜகம் மற்றும் மதப் பிரச்னைகளுக்குள் நாட்டைத் தள்ளுகிறார்கள்,” என எழுதியுள்ளார்.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
 
"நூறாண்டுகளாகக் காத்திருந்தது முடிவுக்கு வந்தது. வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது," என்று X பக்கத்தில் எழுதியுள்ளார்.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
பாகிஸ்தானின் ஊடகங்கள் என்ன கூறியுள்ளன?
பாகிஸ்தானின் புகழ்பெற்ற ஊடகக் குழுவான ஜியோ தொலைக்காட்சி, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது என்று அந்த கோரிக்கையைத் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
 
அந்தச் செய்தியில், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பாரம்பரியத் தலங்களை தீவிரவாத குழுக்களிடமிருந்து பாதுகாக்கவும், அதே போல் இந்திய சிறுபான்மையினரின் கலாச்சார மற்றும் மத உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் பாகிஸ்தான் வலியுறுத்தி கோரிக்கை அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், “சில பாகிஸ்தானிய ட்விட்டர் பயனர்களால் ஒரு வீடியோ பகிரப்படுகிறது, அதில் ஒருவர் தேவாலயம் போன்ற கட்டடத்தின் கூரையில் ஏறி அங்கு ஒருவர் இந்து மதக் கொடியை வைப்பதைக் காணலாம். இந்த வீடியோவைப் பகிரும் போது, ​​சமூக ஊடக பயனர்கள் எதிர்காலத்தில் கிறிஸ்தவ சமூகம் குறிவைக்கப்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்,” என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரபல பாகிஸ்தானிய எழுத்தாளரும் பிபிசியின் முன்னாள் செய்தியாளருமான முகமது ஹனிஃப், “பாகிஸ்தானின் பிரபல பெண் கவிஞரும், பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான ஃபஹ்மிதா ரியாஸ் அவரது கணவர் கைது செய்யப்பட்டபோது இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். இந்தியாவில் இந்துத்துவாவின் தாக்குதலைக் கண்டபோது, ​​அவர் ஒரு பிரபலமான கவிதையை எழுதினார். அதில் ‘நீங்களும் எங்களைப் போலவே மாறிவிட்டீர்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது.”
 
“பஹ்மிதா ரியாஸ் இன்று உயிருடன் இருந்து, பாபர் மசூதியை அகற்றிவிட்டு கோவில் கட்டுவேன் என்று ராமரின் பெயரில் பாடப்படும் புதிய பாடல்களைக் கேட்டால், மிகவும் வருந்தியிருப்பார்,” என்றார்.