இஸ்ரோ சிவன் - விக்ரம் லேண்டர் உடைந்த பாகத்தை நாங்கள் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோம்
சந்திரயான் - 2 விண்கலனின் விக்ரம் லேண்டரை, தமிழகத்தை சேர்ந்த பொறியாளரான சண்முகசுந்தரம் கண்டுபிடித்துள்ளார் என நாசா தனது இணையதளத்தில் பதிவு செய்த நிலையில் சந்திராயன் 2 விக்ரம் லேண்டரை நாசாவுக்கு முன்பே நாங்கள் கண்டறிந்து விட்டோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நாங்கள் ஏற்கனவே கண்டறிந்து விட்டோம் என இஸ்ரோ வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வ செய்தியை வெளியிட்டுளோம் என ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
அதே போல் இஸ்ரோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி ''விக்ரம் லேண்டரை கண்டறிந்து விட்டோம், ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை தொடர்பு கொள்வதற்காக அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகிறோம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ட்விட்டர் பதிவிலும் இஸ்ரோ நிறுவனம் விக்ரம் லேண்ரை கண்டறிந்துவிட்டோம் என்ற தகவலை மட்டுமே வெளியிட்டுள்ளது. ஆனால் கண்டுபிடிப்பு தொடர்பாக புகைப் படம் எதுவும் வெளியிடப்படவில்லை.
நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோ நிறுவனம், சந்திரயான்-2 விண்கலனை செலுத்தியது. இதில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கும் கலன், கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மென்மையாக தரையிறங்குவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்திருந்தது.
ஆனால் இந்த பணி தோல்வியில் முடிந்தது. நிலவில் தரையிறங்குவதற்கு சற்று முன்பாக விக்ரம் லேண்டருன் தொடர்பை இழந்தது இஸ்ரோ கட்டுப்பாட்டு நிலையம். இதையடுத்து காணாமல் போன விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது என்று இஸ்ரோ மட்டுமல்லாமல், நாசாவின் நிலவு ஆராய்ச்சி விண்கலனும் ஆராய்ந்து வந்தன. விக்ரம் லேண்டர் விழுந்திருக்க வாய்ப்புள்ள இடத்தின் படக்கோவைகளை நாசா செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டது.
அந்த படங்களில் இருந்து தற்போது விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் அடையாளம் காணப்பட்டன என்று நாசாவின் அதிகாரபூர்வ இணைய தளம் செய்தி வெளியிட்டது. அதில் இந்தப் பாகங்களை அடையாளம் கண்டவர் சண்முக சுப்ரமணியன் என்பதையும் குறிப்பிட்டு அங்கீகரித்துள்ளது.
ஆனால் இந்த கண்டுபிடிப்பை இஸ்ரோ தலைவர் சிவன் மறுக்கிறார்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக விக்ரம் லேண்டரின் பாகங்கள் நிலவில் இருக்கும் காட்சிகள் நாசாவின் ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 3ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.