1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (21:49 IST)

அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் முறை சரியா?

ஆப்பிரிக்க துணைக் கண்டம் மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள், அரிய வளங்களை சரியான முறையில் பயன்படுத்த மற்றும் ஆபத்தான சுகாதார விளைவுகளைத் தவிர்க்க, மருந்துகளை பரிந்துரை செய்யும் தங்களது கொள்கைகளை மேம்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
 

 
பிரிட்டனின் பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வு ஒன்றில், அமெரிக்க மருத்துவர்கள் குறைந்த விலை மருந்துகள் கிடைக்கும் நிலையிலும், அதைத் தவிர்த்து, அதிக விலை மருந்துகளை பரிந்துரை செய்து ஓர் ஆண்டில் மில்லியன் கணக்கான டாலர்களை வீணடிக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மற்றொரு சர்வதேச ஆய்வில் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவர்கள் குறிப்பாக லாபத்தை நோக்கமாக வைத்து செயல்படும் நிறுவனங்களில், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருக்கும் மருந்துகளை காட்டிலும் அதிக விலை மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
 
இம்மாதிரியான பரிந்துரைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
நோயாளிகளுக்கு ஆண்டிபயாடிக்குகளை பரிந்துரைக்கும் முன் சரியாக ஆய்வு செய்யப்படுவதில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே அது தொற்றுகளுக்கான ஆபத்துகளை அதிகரித்து, மருந்துகளுக்கு எதிர்மறை தன்மையை விளைவிக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.