ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (14:23 IST)

தென்னாப்பிரிக்காவில் காண்டாமிருக வேட்டைக்குச் சென்றவர் சிங்கத்துக்கு இரையான பரிதாபம்

தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் தேசியப் பூங்காவில், காண்டாமிருகங்களை வேட்டையாடச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் யானை ஒன்றால் நசுக்கிக் கொல்லப்பட்டுள்ளார்.
அவரது உடலை சிங்கக் கூட்டம் ஒன்று உண்டுவிட்டது. அவர் கொல்லப்பட்ட செய்தியை அவருடன் காண்டாமிருக வேட்டைக்குச் சென்றவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.
 
வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் கொல்லப்பட்ட செய்தியை இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
தேடல் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மண்டையோடும், ஒரு ஜோடி டிரௌசர்களுமே வியாழனன்று கிடைத்தன.
 
தேசியப் பூங்கா அதிகாரிகள் இறந்தவரின் உறவினர்களுக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
 
 
சட்டவிரோதமாக, அனுமதியின்றி க்ரூகர் தேசியப் பூங்காவில் நுழைவது புத்திசாலித்தனம் அல்ல என்று அந்தப் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மிருக வேட்டைகளால் கடுமையான சிக்கலை எதிர்க்கொண்டுள்ள க்ரூகர் தேசியப் பூங்காவில் இருந்து வேட்டையாடப்பட்டுக் கடத்தப்படும் காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு ஆசிய நாடுகளில் அதிகப் பணம் வழங்கப்படுகிறது.
 
சனிக்கிழமையன்று, 2.1 மில்லியன் டாலர் மதிப்பிலான காண்டாமிருகத்தின் கொம்புகளை ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றினர்.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிக்கிய காண்டாமிருகக் கொம்புகளில் அதிக மதிப்புடையது இதுவாகும்.