செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (23:44 IST)

ரஷ்யா படையெடுத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும்: நேட்டோ தலைவர் நேட்டோ

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும் என்று நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.
 
ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 2014 இல் ரஷ்யா க்ரைமியாவை இணைத்தபோது இருந்ததை விட யுக்ரேன் இப்போது சிறந்த பயிற்சி மற்றும் ஆயுத வலிமை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று ரஷ்யா முடிவெடுப்பதில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டாலும், “படைகளை இணைத்து ஒரு சுதந்திர நாட்டை அச்சுறுத்த முடியும்” என்று காட்ட நினைக்கிறார்கள். அது மிகவும் தீவிரமானது என்று ஸ்டோல்டன்பர்க் கூறினார்.
 
ப்ரசல்ஸ் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதைக் கூறினார்.