1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

உக்ரைன் மீது நாளை ரஷ்யா படையெடுப்பா? அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா நாளை படை எடுப்பு நடத்தும் என உக்ரைன் அதிபர் முக நூலில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் காணப்படுகிறது என்றும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது என்றும் அதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் தனது முகநூலில் உக்ரைன் மீது நாளை அதாவது பிப்ரவரி 14 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த முகநூல் கருத்து குறித்து அமெரிக்கா கூறுகையில் உக்ரைன் மீது நாளை படையெடுப்பு செய்ய ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாக கூறுவதில் நம்பிக்கை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் எந்த நேரத்திலும் ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.