வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (18:00 IST)

நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்க பாகிஸ்தானில் தேவாலயம் எரிக்கப்பட்டதா?

கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்திலுள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில், பாகிஸ்தானில் இஸ்லாமியவாதிகள் தேவாலயம் ஒன்றைத் தீயிட்டு கொளுத்தியதாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பரவி வருகிறது.
 
வெள்ளையின மேலாதிக்கவாத ஆஸ்திரேலியர் ஒருவர் இரண்டு மசூதிகளில் தொழுகை செய்த 50 முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றதோடு, அந்த கொடூரத்தை சமூக ஊடகங்களில் நேரலையில் ஒளிபரப்பினார்.
 
இதற்குப் பதிலாக நடத்தப்பட்டதாக கூறி பகிரப்படும் 'தேவாலய எரிப்புக் காணொளி'யில் முக்கிய கட்டடத்தில் சிலர் ஏறுவது தெரிவதோடு, காணெளியின் முடிவில் கிறிஸ்தவ அடையாளப் பொருளொன்றை அவர்கள் உடைப்பதும் தெரிகிறது.
 
மக்கள் கத்துவதையும் இந்த காணொயில் கேட்க முடிகிறது. இதன் ஒரு பகுதியில். இந்த தேவாலயத்தை சுற்றி புகையையும் காண முடிகிறது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இது பகிரப்படுகிறது. 
 
ஆனால், நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில், பாகிஸ்தானில் தேவாலயம் கொளுத்தப்பட்டதாக பரவி வரும் செய்தி பொய். அதிகமானோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதலுக்கு பழிவாங்கப்பட்டதாக கூறி, அதற்கு சான்றாக 30 வினாடிகளே இருக்கும் இந்த 'தேவாலய எரிப்பு' காணொளி பகிரப்படுகிறது.
 
ஆனால், இந்த காணொளி தோன்றிய இடத்தை தேடியதில் இது பாகிஸ்தானை சேர்ந்ததல்ல. எகிப்தை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இந்த காணொளி 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது.