வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : சனி, 1 பிப்ரவரி 2020 (14:53 IST)

"என்னை வன்புணர்வு செய்து, என்மீது சிறுநீர் கழித்தார்” - ஒரு நடிகையின் வாக்குமூலம்

ஹாலிவுட் தயாரிப்பாளரான 66 வயதாகும் ஹார்வி வைன்ஸ்டீன் மீது டஜன் கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் புகார்களை தெரிவித்திருந்தனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் சூழலில், ஹார்வியால் தாம் அடைந்த இன்னல்களை பகிர்ந்துள்ளார் ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக முயற்சித்த ஜெசிகா.
பின்வரும் தகவல்கள் உங்களுக்குக் கவலை அளிக்கலாம்.
 
இனி அவர் கூறியவற்றிலிருந்து,
 
2012 இறுதியில் அல்லது 2013 தொடக்கத்தில் ஒரு பார்ட்டியில் ஹார்வியை சந்தித்தேன். திரைப்பட நாயகி ஆக வேண்டும் என்ற என் விருப்பத்தை அவரிடம் பகிர்ந்தேன். அவர் என்னையும், ஒரு நண்பரையும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வர கூறினார். நான் அந்த ஹோட்டல் அறைக்கு சென்றதும் என்னைப் படுக்கையில் தள்ளி வாய் வழி புணர்ச்சியில் ஈடுபட்டார்.
 
பின் அவருடன் ஒரு உறவில் இருந்ததாகவும், ஆனால் அந்த உறவில் ஏகப்பட்ட வன்முறைகளை எதிர்கொண்டதாகவும் ஜெசிகா கூறி உள்ளார்.
 
என்னை வன்புணர்வு செய்து, என் மீது ஒரு முறை சிறுநீர் கழித்தார்.
 
'நோ' என்ற வார்த்தையைக் கேட்டால், அவர் தூண்டப்பட்டுவிடுவார். வேண்டாம் என்றால் விடமாட்டார் என்று ஜெசிகா கூறி உள்ளார்.
 
இவ்வளவு நடந்தும் அவருடன் உறவில் இருந்ததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, "இதற்கு சுருக்கமான பதில் ஏதும் என்னிடம் இல்லை" என்று கூறி உள்ளார்.
 
தொடக்கத்தில் பாலியல் தாக்குதலை எதிர்கொண்டது, என்னைக் குழப்பமடைய செய்தது. ஒரு பயத்துடன்தான் அவருடனான உறவைத் தொடர்ந்தேன் என்று ஜெசிகா கூறுகிறார்.
 
ஜெசிகா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஹார்வி மறுக்கிறார்.
 
ஜெசிகா உடனான உறவானது இருதரப்பு ஒப்புதலுடன் நடந்த ஒன்று என்கிறார் ஹார்வி தரப்பு வழக்கறிஞர்.
 
தொடர்புடைய செய்தி:பாலியல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய கோருகிறார் ஹார்வி வைன்ஸ்டீன்