வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வியாழன், 5 டிசம்பர் 2019 (12:46 IST)

மேட்டுப்பாளையம்: 17 பேரை பலி கொண்ட சுவரின் எஞ்சிய பாகங்களை இடிக்கிறது நகராட்சி

கோவை, மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரை பலி கொண்ட சுவர் தற்போது இடிக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் கிராமத்தில் உள்ள இந்த சுவரை தற்போது நகராட்சி இடிக்கிறது.
 
தலித் அருந்ததியர் குடியிருப்புப் பகுதியையும், நான்கு ஆடம்பர வீடுகள் உள்ள பகுதியையும் பிரிக்கும் வகையில் சுமார் 25 அடி உயரத்தில் இந்த சுவர் கட்டப்பட்டிருந்தது.
 
கருங்கல்லில் மட்டுமே கட்டப்பட்ட இந்த சுவரின் ஒரு பாகம் மழையில் இடிந்து விழுந்தபோதுதான் நான்கு வீடுகள் நொறுங்கி 17 தலித் மக்கள் கொல்லப்பட்டனர்.
 
இந்த சுவரின் மற்றொரு பகுதியை இடிக்கும்படி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
 
மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி தீண்டாமை சுவர் என விமர்சிக்கப்பட்ட இச்சுவர் டிசம்பர் 5ம் தேதி காலை இடிக்கப்பட்டுவருகிறது.
 
உயிர்ப்பலி கொண்ட சுவரின் பாகம் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டது.
 
மீதமுள்ள சுவர் இரண்டு பாகங்களாக இருக்கிறது. ஒரு பாகம் கீழே கருங்கல்லும் மேலே ஹாலோ பிளாக் கற்களும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பாகம் முழுவதும் ஹாலோபிளாக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.