1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (23:04 IST)

காஷ்மீர் படுகொலைகள் - ராணுவ தளபதியுடன் அமித் ஷா ஆலோசனை

காஷ்மீர் தொடர் படுகொலைகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ தளபதி, ஆளுநர் மற்றும் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்து வருகிறார்.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் குல்காம் பகுதியில் வங்கி மேலாளர் விஜய்குமார் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரு மாத காலத்தில் அங்கு, 4வது நபர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காஷ்மீரில் தற்போதுள்ள சூழ்நிலை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீர் டிஜிபி தில்பேக் சிங், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய ரிச்ர்வ் போலீஸ் இயக்குநர் குல்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.