வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (13:48 IST)

உலகின் வயதான இரட்டையர்களாக ஜப்பான் சகோதரிகள் கின்னஸ் சாதனை

உலகின் வயதான இரட்டையர்களாக உமேனோ மற்றும் கொடாமா ஆகிய ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

அவர்களுக்கு வயது 107 ஆண்டுகள் 300 நாள்கள். இதற்கு முன்னரும் ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகளே வயதான இரட்டையர்களாக இருந்தனர். அந்தச் சாதனையை உமேனோவும் கொடாமாவும் முறியடித்துள்ளனர்.
 
ஜப்பானில் முதியவர்கள் நாள் கொண்டாடப்பட்ட தினத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.
 
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு சகோதரிகளும் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.