1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (13:58 IST)

ஜிஎஸ்டி வரி: பீட்சா டாப்பிங் நிறுவனம் சந்தித்த ஒரு விநோத வழக்கு

Pizza
பீட்சாவை சுவை நிறைந்தாக ஆக்கும் அதன் மேற்புறத்தில் தூவப்படும் டாப்பிங் கலவை சரியாக இருக்க வேண்டியது மிக அவசியம். டாப்பிங்கில் அதிக பொருட்கள் சேர்ப்பதால் போதுமான அளவு வேகாமல் கடினத்தன்மையுடன் இருக்கும். தவறான கலவையானது சுவையை பாதிக்கும்.

பீட்சா டாப்பிங் தயாரிக்கும் ஒரு இந்திய நிறுவனம் ஒரு வித்தியாசமான சவாலை நீதிமன்றத்தில் எதிர்கொண்டிருக்கிறது. இது டாப்பிங்கின் சுவை பற்றியது அல்ல. அவற்றுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதம் பற்றிய சர்ச்சையாகும்.

கேரா டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் முன் வைத்த வாதத்தில், தங்களின் மொஸரெல்லா டாப்பிங், பாலடைக்கட்டி என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது. பாலாடைக்கட்டி, பால் திடப்பொருட்களை பயன்படுத்தியே தங்களது பீட்சா டாப்பிங்குகள் பெரும்பாலும் தயாரிக்கப்படுவதாக கூறியுள்ளது. தங்கள் வாதத்தின்படி இது வகைப்படுத்தப்பட்டால் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் ஹரியானாவில் உள்ள நீதிமன்றம் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. டாப்பிங்கில் உள்ள பாலடைக்கட்டியை தனித்த பாலாடை கட்டி என உண்மையில் வகைப்படுத்த முடியாது என்று கூறி விட்டது.

பீட்சா டாப்பிங்கில் சேர்க்கப்படும் பொருட்களில் 22 சதவிகிதம் தாவர எண்ணைய் துல்லியமான அளவில் இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. தாவர எண்ணையானது பீட்சா நிலைத்தன்மையாக இருக்கவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது. விலை மலிவாகவும் கிடைக்கிறது என்று கூறியது.

தாவர எண்ணைய் கொழுப்பானது பாலாடை கட்டியின் சேர்க்கை பொருள் அல்ல என்று நீதிமன்றம் கூறியது. எனவே டாப்பிங்கில் உள்ள அதனை பாலாடை கட்டியாக கருதுவதற்கு தகுதி படைத்தது அல்ல. மாறாக அது உண்ணக்கூடிய தயாரிப்பு என்று அழைக்கப்பட வேண்டும். அதற்கு 18 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் கூறியது. இந்த பிரச்னையில் அந்த நிறுவனத்தின் வாதம் எடுபடவில்லை.

29 மாநிலங்களில் நிலவிய உள்ளூர் வரி விதிப்பு முறைகளுக்கு பதிலாக இந்தியாவின் முன்னோடி முறையான ஜிஎஸ்டி முறை சுருங்கி விட்டது என்று வரி வல்லுநர்கள் நம்புவதை நோக்கி இந்த நீதிமன்ற வாதங்கள் இட்டுச் சென்றன. பாக்கெட்டில் அடைக்கப்படாத உணவுக்கு 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், மற்றும் 28 சதவிகிதம் , பூஜ்ய வரி என ஐந்து விதமான வரி விதிப்புகள், ஏறக்குறைய 2,000 பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி என மாநிலங்களின் வரி விதிப்பு முறை மிகவும் சிக்கலானதாகிவிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர். (பெட்ரோல், டீசல், மின்சாரம் மற்றும் ரியஸ் எஸ்டேட் ஆகியவை ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு பெற்றுள்ளன.)

"குறிப்பிட்ட குறியீடு அதோடு அதன் விகிதங்கள் அடிப்படையிலான பொருட்கள் அல்லது சேவைகளை வகைப்படுத்துவது குழப்பத்துக்கு இட்டுச் சென்றது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்ததில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நீதிமன்ற தீர்ப்புகளும் வந்துள்ளன," என்கிறார் ஜிஎஸ்டி மற்றும் மறைமுக வரிகள் குறித்த பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற ஆலோசனை நிறுவனத்தின் பங்குதாரர் அனிதா ரஸ்தோகி.

இந்திய உணவு தொழில்துறை என்று வரும்போது, குறிப்பாக இந்த வரி விதிப்பு முறை அந்தத்துறையோடு தன்னைத்தானே முடிச்சிட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

தோசைக்கல் அல்லது மெல்லிய கடாயில் போட்டு எடுக்கபடும் மிருதுவான, தட்டையான ரொட்டியான பரோட்டோ மீது 18 சதவிகிதம் வரிவிதிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அடிப்படையில் வட்டமாக தட்டையாக தயாரிக்கப்படும் ரொட்டிக்கு 5 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

குஜராத்தை சேர்ந்த வடிலால் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வேகவைக்கப்பட்ட காய்கறிகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் தங்களுடைய 8 விதமான பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பரோட்டா வகைகளுக்கு, இந்திய துணைக்கண்டத்தின் பிரதான உணவான ரொட்டிக்கு விதிக்கப்படும் வரியைப் போல அல்லாமல் மாறாக வசூலிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியது. இந்த இரண்டு உணவு வகைகளும் கோதுமை மாவு எனும் ஒரே பொருளில்தான் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால், நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்து விட்டது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பரோட்டாவில் முக்கியமாக கோதுமை மாவு உள்ளது என்பதை நீதிபதி ஒப்புக்கொண்டார். ஆனால், அதில் மறைந்திருக்கும் விஷயங்களைபற்றி கூறிய நீதிபதி, தண்ணீர், தாவர எண்ணைய், உப்பு, காய்கறிகள், முள்ளங்கி போன்ற இதர சேர்க்கை பொருட்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். எனவே அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், "மனுதார ர் குறிப்பிடும் பரோட்டோ வகைகள், ரொட்டியில் இருந்து வேறுபட்டவை," என்று கூறியது.
pizza

இதுபோன்ற மேலும் பல புரிந்து கொள்ள முடியாத தீர்ப்புகள் உள்ளன. அதே அளவுக்கு அவற்றை குறிப்பிடலாம். ஐஸ்கிரீம் பார்லர்களில் விற்கப்படும் ஐஸ்கிரீமுக்கு , ரெஸ்டாரெண்ட்களில் விற்கப்படும் ஐஸ்கிரீமை விட அதிகமாக 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ரெஸ்டாரெண்ட்கள் ஐஸ்கிரீம்களை சமைத்தோ அல்லது தயாரித்தோ விற்பனை செய்யாமல் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை மட்டுமே விற்கின்றன. விநியோகத்தில் ஒரு சேவையின் சில பொருட்கள் இருந்தாலும் பார்லர்கள் ஐஸ்கிரீமை ஒரு பொருளாக விற்கின்றன. சேவையாக இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

உருளைக் கிழங்கு மாவு மற்றும் பனையில் இருந்து கிடைக்கும் மாவு ஆகியவற்றில் தயாரிக்கப்படும் ப்ரைம்ஸ் எனப்படும் இந்திய வகை நொறுக்கு தீனி தொடர்பான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நொறுக்குத்தீனி தயாரிப்பாளர்கள் அப்பளம் போன்ற மெல்லிய, வட்டவடிவிலான பான்கேக் நொறுக்குத்தீனிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டனர்.

ஆனால், ப்ரைம்ஸ் நொறுக்குத்தீனியானது உண்பதற்கு தயாராக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அப்பளத்தை சமைத்த பிறகே உண்ண வேண்டும் என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது. "இரண்டு தயாரிப்புகளும் வெ்வேறானவை. தனிப்பட்ட அடையாளங்கள் கொண்டவை," என்று நீதிபதி கூறினார். எனவே ப்ரைம்ஸ் நொறுக்கு தீனிக்கு 18 சதவிகித வரி விதிப்பு தொடரும் என்றும் உத்தரவிட்டார்.

சுவையூட்டப்பட்ட பால் தயாரிப்பவர் தங்களது பானத்துக்கு 12 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றார். சாதாரண பால் விற்பனைக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தன்னுடைய தயாரிப்பில் 92 சதவிகிதம் பால், 8 சதவிகிதம் சர்க்கரை சேர்ப்பதாக தயாரிப்பாளர் கூறினார். ஆனால், சட்டப்படி சுவையூட்டப்பட்ட பால் என்பது பால் என்ற வரம்புக்குள் வராது என்று நீதிமன்றம் கூறியது.

எனவே இதற்கு வரி விலக்கு அளிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. தோசை சமைப்பதற்கான ரெடிமேட் மாவு பாக்கெட் மற்றும் இட்லி சமைப்பதற்கான ரெடிமேட் மாவு பாக்கெட் ஆகியவற்றுக்கு, அவற்றை சமைக்க பயன்படுத்தும் மாவை விட அதிகமாக வரி விதிக்கப்பட வேண்டும் என்ற சர்ச்சையும் உள்ளது.

வெவ்வேறு விகிதங்களை ஒரு குறைக்கப்பட்ட விகிதமாக எளிதாக்குவது மற்றும் சுருக்குவதுதான் இதைப் போக்குவதற்கான ஒரே வழி என்று வரி வல்லுநர்கள் நம்புகிறார்கள். (1995க்குப் பிறகு ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்திய நாடுகளில் 80% ஒரே விகிதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளன.)

அரசின் கொள்கையில் செல்வாக்கு செலுத்தும்(இந்தியாவில்) பல்வேறு குழுக்கள் ஒரு தொழில்துறைக்கு அல்லது இன்னொரு தொழில் துறைக்கு வரி விதிப்பை அதிகரிக்க வேண்டும் என்றோ அல்லது குறைக்க வேண்டும் என்றோ வலியுறுத்தும் லாபியில் ஈடுபடுகின்றன. இது பொருளாதாரத்தின் வள ஒதுக்கீட்டை சிதைக்கிறது என்கின்றனர் விஜய் கேல்கர், அஜய் ஷா ஆகிய பொருளாதார வல்லுநர்கள். அரசானது பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளை பெறும் முக்கியமான வாடிக்கையாளராக இருக்கிறது. குறைந்த ஒரே அளவிலான ஜிஎஸ்டி என்பது அரசின் பல்வேறு மட்டத்திலும் செலவை மிச்சப்படுத்துவதாக இருக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

குறைந்த ஒரே விகிதம் என்பது வகைப்படுத்தும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். தவிர வரி ஏய்ப்புக்கான ஊக்கத்தொகையை குறைக்கும் மற்றும் இணக்க செலவுகளை குறைக்கவும் வாய்ப்புள்ளது.

"நீங்கள் விகிதங்களை ஒன்றிணைத்தாலோ அல்லது குறைத்தாலோ அந்த தருணமே வகைப்படுத்துதல் என்ற சர்ச்சைகள் குறையும். ஆனால், இந்தியா போன்ற உயர் வருவாய் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நாடுகளில், ஒன்று அல்லது இரட்டை விகித கட்டமைப்பானது ஏழைகளின் மீது பெரும் வரி சுமையை விதிக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கும்," என்கிறார் இஒய் எனும் உலகளாவிய கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் இந்திய மறைமுக வரி சேவைகளுக்கான பங்குதாரர் உதய் பிம்ப்ரிகர்.

பிரதமர் நரேந்திர மோதி ஒருமுறை ஜிஎஸ்டி குறித்து பேசும்போது"நல்ல மற்றும் எளிமையான வரி" என்று வர்ணித்திருந்தார். ஆனால், முற்றிலும் அப்படி மாறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

Updated By Prasanth.K