செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (09:58 IST)

டொனால்டு டிரம்பின் முன்னாள் மனைவி இவானா டிரம்ப் காலமானார்

Donald Trump
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி இவானா டிரம்ப் காலமானார். அவருக்கு வயது 73.


“சிறந்த மற்றும் ஊக்கமளிக்கும் வாழ்க்கையை நடத்திய வியப்புக்குரிய, அழகான பெண்,” என தன் சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

செக் குடியரசில் பிறந்த இவானா, 1977ஆம் ஆண்டு டொனால்டு டிரம்பை திருமணம் செய்தார். 15 ஆண்டுகள் கழித்து 1992 ஆம் ஆண்டில் இருவருக்கும் விவாகரத்து ஆனது.

இருவருக்கும் ஜூனியர் டொனால்டு டிரம்ப், எரிக் டிரம்ப் என இரண்டும் மகன்களும் இவான்கா என்ற மகளும் உள்ளனர்.

இவானா மரணம் தற்செயலானதாக இருக்கலாம் என, போலீசார் நம்புவதாக ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள தன் வீட்டின் படிக்கட்டுக்கு அருகில் இவானா சுயநினைவின்றி இருந்ததாகவும் அவர் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அச்செய்தி முகமை தெரிவித்துள்ளது.

1980கள் மற்றும் 1990களில் குறிப்பிடத்தகுந்த பிரபலங்களாக டொனால்டு டிரம்ப் மற்றும் இவானா டிரம்ப் இருந்துள்ளனர். இருவருடைய பிரிவும் பொதுமக்களின் ஆர்வத்திற்குரிய ஒன்றாக இருந்தது.

டொனால்டு டிரம்ப் உடனான பிரிவுக்குப் பின், இவானா அழகுசாதன பொருட்கள், ஆடைகள், நகைகள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி தொழிலில் ஈடுபட்டார்.