வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:22 IST)

முன்னாள் மனைவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் காதலியுடன் பிரபல நடிகர் !

hrithivk rosan susaina
முன்னாள் மனைவி கலந்துகொண்ட பார்ட்டியில்   பாலிவுட் நடிகர் தனது காதலி யுடன் கலந்து கொண்டார்.

பிரபல பாலிவுட் நடிகர்  ஹிருத்திக் ரோசன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஹிருத்திக் ரோசன், சூசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு  ரிஹான், ரிதான் என்று 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.   சில ஆண்டுகளுக்கு முன் ஹிருத்திக் -         சூசன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே கடந்த 2014 ஆம் ஆண்டு இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

விவாகத்திற்கு இருவரும்  நட்புடன் பழகி வருகின்றனர். இந்நிலையில், சூசன் தற்போது  நடிகர் அர்ஸ்ஸான் கோனியை காதலிக்கிறார். அதேபோல்  நடிகர் ஹிருத்திக் ரோசன் சபா ஆசாத்தை காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டனர். அப்போது இரண்டு  ஜோடிகளும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.