Daily Horoscope
✕

கனடா பிரதமரின் செல்வாக்கு சரிகிறதா?

Updated: புதன், 3 ஏப்ரல் 2019 (17:39 IST)
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கட்சியிலிருந்து இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கி உள்ளார். அவர்கள் இருவரும் எஸ்.என்.சி-லாவ்லின் எனும் ஒரு பெருநிறுவனத்திற்கு எதிரான கிரிமினல் விசாரணையில் ஜஸ்டின் தலையிடுகிறார் என குற்றஞ்சாட்டி, அதனை அம்பலப்படுத்தியவர்கள்.
 
ஜோடி வில்சன் மற்றும் ஜானெ பில்போட் ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜஸ்டின் அரசு மீது குற்றஞ்சாட்டி தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர். விரைவில் தேர்தல் நடக்க இருக்க சூழ்நிலையில் ஜஸ்டினின் தாராளவாத கட்சியிலிருந்து அவர்ஜள் நீக்கப்பட்டுள்ளனர்.
 
ஒரு முறைகேட்டை அம்பலப்படுத்திய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கியதன் மூலம் ஜஸ்டின் நீதிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஸ்சேர்.
 
பொதுத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கடந்த சில மாதங்களாக ட்ரூடோவுக்கு மக்களிடையே உள்ள ஆதரவு குறைந்து வருகிறது. லிபியாவில் சில தொழில் ஒப்பந்தங்களைப் பெற அந்நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எஸ்.என்.சி-லாவ்லின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

இது ஒன்னும் புதுசுல்லயே!.. தனுஷ் அரசியலுக்கு வருவது பற்றி திருமா கருத்து!...

5 நிமிஷத்தில் விற்று தீர்ந்த iPhone Duo!.. பயணர்கள் அதிர்ச்சி...

AI Data Center அமைக்க 2 லட்சம் மரங்களை வெட்டிய Google!.. பின்லாந்தில் அதிர்ச்சி...

பசுமை தமிழகம் நோக்கி தமிழக அரசு: 1 கோடி மரங்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை!

வெளிநாடு செல்ல முயன்ற வீரமணி மகள் தடுத்து நிறுத்தம்!.. விமான நிலையத்தில் பரபரப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments