பழைய வாழ்க்கைக்கு திரும்பும் ஆஸ்திரேலியர்கள்
ஆஸ்திரேலியா, நவம்பர் மாதம் தொடங்கி தனது சர்வதேச எல்லைகளை திறக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆஸ்திரேலிய குடிமக்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் தடை விதித்தது.
இது கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பெரிதும் உதவியது ஆனால் மக்களிடையே பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
பலர் தங்களின் குடும்பங்களை விட்டு நீண்டநாள் பிரிய வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
“ஆஸ்திரேலியர்களுக்கு தங்களின் வாழ்வை திரும்பி அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மக்கள் அவர்கள் வசிக்கும் மாநிலங்களின் தடுப்பு மருந்து விகிதம் 80 சதவீதமாக இருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
அதேபோல வெளிநாட்டு பயணிகளுக்கு உடனடியாக அனுமதில்லை. இருப்பினும் அதுகுறித்து யோசித்து வருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.