வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (13:54 IST)

கொரோனா வைரஸ் பாதிப்புகளை சரி செய்ய அமெரிக்கா செலவிடும் பெருந்தொகை!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உண்டாகியுள்ள பொருளாதார இழப்புகளை சரிசெய்ய 484 பில்லியன் (48,400 கோடி) அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணத் தொகுப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ், வியாழன்று ஒப்புதல் அளித்துள்ளது.
 
இது அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள, கோவிட்-19 உண்டாக்கிய பொருளாதார பாதிப்புகளுக்கு உதவிகள் வழங்கும் நான்காவது நிதி மசோதாவாகும்.

கடந்த மாதம் அமெரிக்க வரலாற்றிலேயே அதிகபட்சமாக இரண்டு டிரில்லியன் (இரண்டு லட்சம் கோடி) டாலர் மதிப்பிலான பொருளாதார உதவி நிதித் தொகுப்புக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தது.
 
இதுவரை சுமார் 3 டிரில்லியன் டாலர் (3 லட்சம் கோடி) அளவுக்கு நிவாரண உதவிகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது அமெரிக்க அரசின் நிதிப் பற்றாக்குறையை வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கச் செய்யும்.