Daily Horoscope
✕

பாகிஸ்தானில் 2 ரயில்கள் மோதல்: 25 பேர் உயிரிழப்பு

Written By Sasikala
Updated: திங்கள், 7 ஜூன் 2021 (10:21 IST)
பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மில்லட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மோதிக்கொண்டன.
 
இன்று அதிகாலையில் விபத்து நடந்ததாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
பெட்டிகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
 
மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் கராச்சியில் இருந்து சர்கோதா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி  நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments