Astrology Zodiac Scorpio Chr.htm

Notifications

விருச்சிகம் விருச்சிகம்
குணம்

சாமர்த்தியசாலியாக திகழும் விருட்சிக ராசிக்காரர், சுய மரியாதையை விரும்புபவர். ஆத்மார்த்தமான பணிகளை செய்வார். மிகவும் நம்பிக்கையானவர். தன்னை நம்பி வந்தவர்களுக்காக எதையும் செய்வார். எந்த ஒரு பொருளையும் உபயோக கரமாக மாற்றும் திறமைசாலி. யாரையும் மன ரீதியாக பார்ப்பார். கொடுக்கும் மனப்பான்மை உண்டு. எந்த ஒரு காரியத்தையும் நல்ல கண்ணோட்டத்திலேயே பார்ப்பார்கள். யாரையும் உதாசீனப்படுத்த மாட்டார்கள். குடும்பத்தார் மீது அதிக அன்பு காட்டுவார்கள். எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வர். மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதிலும், தெளிவுபடுத்துவதிலும் இவரை விட சிறந்தவர் யாரும் இல்லை.