வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:27 IST)

விருச்சிகம்: ஆவணி மாத ராசி பலன்கள்

விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை - பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பதற்கேற்ப சாதுவாக காணப்பட்டாலும் முன் கோபம் அதிகமாக இருக்கும் விருச்சிக ராசியினரே நீங்கள் கொடுத்த வேலைகளை கச்சிதமாக முடிப்பவர்.

இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.  வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். பணவரத்து கூடும். 
 
தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். 
 
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம்  செல்ல நேரலாம். 
 
கலைத்துறையினருக்கு உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும்.  கல்வியில் வெற்றி பெறுவதை  குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். 
 
விசாகம் 4ம் பாதம்: நீங்கள் நல்ல உழைப்பாற்றல் கொண்டவர்கள் என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன் பணி புரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் உங்களுக்குள்ள வேலைப்பளு குறையும். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதைக் தவிர்ப்பது நல்லது. 
 
அனுஷம்: தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் நீச்சல் போட்டால் ஏற்றத்தைப் பெற முடியும். வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் சில நேரங்களில் தட்டிச் சென்றாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகளிடமும் உழைப்பாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது  நல்லது. 
 
கேட்டை: தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்களை சந்தித்தாலும் லாபங்கள் குறையாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. அதிக உழைப்பு உடல் சோர்வை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை. 
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 04, 05, 06
 
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 26, 27, 28
 
பரிகாரம்:  மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்.