திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (14:34 IST)

துலாம்: ஆவணி மாத ராசி பலன்கள்

சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் -  எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த துலா ராசியினரே நீங்கள் மனஉறுதிமிக்கவர். இந்த மாதம் பணவரத்தை அதிகப்படுத்தும் அதே நேரத்தில் சுப விரையச்செலவும் உண்டாகும்.

சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல்  ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே  கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில  காரியங்கள் நடந்து முடியும். 
 
தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.  வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். 
 
குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும்.   கணவன், மனைவி இருவரும் சேர்ந்து  எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும்.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். 
 
பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை  தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்துறையினர் பாராட்டு  கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். 
 
சித்திரை 3, 4 பாதங்கள்: அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் குறையும். உடல் ஆரோக்கியமானது ஒரளவுக்கு சுமாராக இருக்கும். உடல் நிலையில் சோர்வு கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் விரைந்து செயல்பட முடியாத நிலை ஏற்படும். எனவே கவனம் தேவை. மனைவியின் உடல்  நிலையிலும் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை ஏற்படுத்தும். 
 
சுவாதி: முன் கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும்.; பணவரவுகள் ஒரளவுக்கு  சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து  நடந்து கொண்டால் சற்று அனுகூலப்பலனை அடைய முடியும். 
 
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் தோன்றும்.  புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உத்தியோக ரீதியாக எதிர் பார்க்கும் உயர்வுகள் சற்று தடைகளுக்குப் பின் கிட்டும். 
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 02, 03
 
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 24, 25
 
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.