செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By Sasikala

ஜெயிஷ்டிகாசனம் - யோகாசனம்

ஜெயிஷ்டிகாசனம் - யோகாசனம்
செய்முறை:
 
1. குப்புறப் படுத்து, நெற்றி தரையில் தொடும் படி வைத்து, கைகள் இரண்டையும் விரல்கள் கோர்த்த நிலையில் தலையில் வைத்துக் கைமுட்டிகளை தரையில் தொடும்படி வைக்கவும்.


 
 
2. கால்கள் நீட்டப்பட்டு ,குதிகால்மேல் நோக்க நுனிக்கால்கள் தரையிலிருக்க வேண்டும்.
 
3. மூச்சு சாதாரண நிலையில் இருக்க ஒரு சில நிமிடங்கள் இந்நிலையிலிருந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
பலன்கள்:
 
1.  தொப்பையைக் குறைக்கிறது.
 
2.  மன இறுக்கத்தை போக்குகிறது.
 
3.  தண்டு வடங்களில் உள்ள கோளாறுகளை அகற்றுகிறது.
 
4. உடலுக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கிறது.