வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நிகழ்வுகள் 2022
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2022 (08:33 IST)

2022-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகைகள்!

TOP 10 ACTRESS TAMIL CINEMA 2022
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் ஒவ்வொரு துறையிலும் டாப் -10 இடங்களைப் பிடித்த பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி,  தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டிற்கான டாப் 10 நடிகைகளின் பட்டியல் பின்வருமாறு.
  1. நயன்தாரா
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல், O2, காட்பாதர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி சூப்பட் ஹிட் ஆனது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே இப்பட்டியலில் இவர் முதலிடம் பிடித்துள்ளார்.
  1. சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு யசோதா, காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.  இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 8 கோடி சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
thrisha
  1.  த்ரிஷா
தமிழ் சினிமாவில்  அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் பொ.செ-1 வெளியாகி குந்தவையாக திரிஷா நடித்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
  1.  பூஜா ஹெக்டே
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே, விஜய்யின் பீஸ்ட்படத்தில் அவருக்கு ஜோடியாக  நடித்தார், அதேபோல், ராதேஷ்யாம் படத்திலும் அவர் நடிப்பு வரவேற்பை பெற்றது. இரு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
  1. கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி, மகா நதி படத்தில் தேசிய விருது பெற்றாலும், இப்படத்தை அடுத்து, இவருக்கு இந்தி, மலையாளம், தெலுங்குப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில், மகேஷ்பாபுவுடன் சர்க்காரு வாரு பாட்டா, குட்லக் சரி, சாணிக்காகிதம் உள்ளிட்டம் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

 
nithya menon
  1. நித்யாமேனன்
குளிர்100 டிகிரி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இவர் நடிப்பில், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் வெளியானது, இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இவர் ஒரு படத்தில் நடிக்க  ரூ.2கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது..
  1.  சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர்,  நடிப்பில், சூர்யா- ஜோதியா வெளியிட்ட படம் கார்க்கி. சினிமா விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் சாய்பல்லவியின் நடிப்பு கொண்டாடப்பட்டது.
இவர் ஒரு படத்தில் நடிக்கர் ரூ. 2 கோடி முதல் ரூ. 3கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
 
  1. பிரியங்கா மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடியையாக வளர்ந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் நடிப்பில், இந்த ஆண்டு டான், எதற்கும் துணிந்தவர் உள்ளிட்ட இரு படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
  1.    காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், சூர்யா, கார்த்தி ஆகிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்த அவர், துல்கர்சல்மானுடன் இணைந்து நடித்த ஹே சினாமிகா இந்த ஆண்டு வெளியானது. தற்போது, இந்தியன்-2, கோட்ட்ஸ்டி, கருங்காப்பியம், கருடா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
 
aiswarya lakshkmi
  1. ஐஸ்வர்யா லட்சுமி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிப்பில், இந்த ஆண்டு, குமாரி, கோட்சே, அம்மு ஆகிய படங்கள் வெளியானது. அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொ.செ-1 படத்தில், அவர் பூங்குழலி வேடத்தில் நடித்து அசத்தினார் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

Edited By Sinoj