தோல்வியை ஏற்காத ட்ரம்ப்: ஜோ பைடன் வருத்தம்
அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்காமல் டொனால்ட் டிரம்ப் இருப்பது தனக்கு சங்கடத்தை தருகிறது என்று ஜோ பைடன் வருத்தம்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப்பை விட அதிக வாக்குகள் பெற்று அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். இது குறித்து ஜோ பைடனிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், உண்மையை சொல்வதென்றால் எனக்கு அது சங்கடத்தை தருவதாக கருதுகிறேன் என்று பதிலளித்தார்.
மேலும், ஒரு விஷயத்தை என்னால் தெரிவிக்க முடியும். இப்படி நடந்து கொள்வது அதிபர் பதவி வகிப்பவருக்கு அழகல்ல. கடைசியில் அனைவரும் எதிர்பார்க்கும் ஜனவரி 20 ஆம் தேதி வரத்தான் போகிறது என்றார். அதாவது ஜனவரி 20 ஆம் தேதி தான் அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்கும் தினமாகும்.