1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (05:59 IST)

ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த நாட்டில் தெரியுமா?

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இன்கமிங் அழைப்புகளுக்கு கூட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. அதேபோல் உலகிலேயே இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் டேட்டா கட்டணமும் மிகக்குறைந்த அளவில்தான் உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பின்னர் இலவச டேட்டா முதல் மிகக்குறைந்த கட்டணத்தில் டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து வருகிறது
 
இந்த நிலையில் இந்தியாவில் தான் உலகிலேயே குறைந்த கட்டணத்தில் 1 ஜிபி டேட்டா கிடைப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. சராசரியாக இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் ரூ.18.08 என்று உள்ளது. இந்தியாவை அடுத்து கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உக்ரைன், ருவாண்டா ஆகிய நாடுகள் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கும் முதல் ஐந்து நாடுகள் ஆகும்
 
அதேபோல் உலகிலேயே ஒரு ஜிபி டேட்டாவுக்கு அதிக கட்டணம் பெறும் நாடுகளில் முதலிடத்தில் ஜிம்பாவே நாடு உள்ளது. இங்கு ஒரு ஜிபி டேட்டாவுக்காக வாடிக்கையாளர்கள் ரூ.5230 செலவு செய்கின்றனர். இதனால் இங்கு இண்டர்நெட் பயன்பாடு குறைவாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு பயன் என்னவெனில் இங்குள்ள யாரும் ஆபாச இணையதளங்கள் பக்கம் செல்வதே இல்லை என்பதுதான். ஜிம்பாவேவை அடுத்து ஈக்வடோரியல் கினி, செயிண்ட் ஹெலின, ஃபாக்லேண்ட் தீவு மற்றும் திஜிப்வுத்தி தீவு ஆகிய நாடுகள் இண்டர்நெட் கட்டணம் அதிகம் வசூலிக்கும் ஐந்து நாடுகள் ஆகும்