திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (07:54 IST)

இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவர்: குவியும் வாழ்த்துக்கள்

இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவர்
இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவர் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
இஸ்ரேல் நாட்டில் முதல் திருநங்கை கால்பந்து நடுவர் என்ற பெருமை சாகி பெர்மன் என்பவர் சொந்தகாரர் ஆகிறார். இவர் இஸ்ரேலில் நடுவராக பணிபுரிந்த கால்பந்து போட்டி சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இஸ்ரேல் நாட்டில் முதல் நடுவர் என அதிகாரப்பூர்வமாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
கால்பந்து போட்டி நடைபெறும் நேரத்தில் ஆடுகளத்தில் பெண்ணிடம் பேசுவதைப் போன்ற வீரர்கள் தன்னிடம் மகிழ்ச்சியாக உரையாடியது தனக்கு மிகுந்த மகழ்ச்சியாக இருந்தது என பெர்மன் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே உலகின் ஒருசில நாடுகளில் திருநங்கைகள் கால்பந்து நடுவர்களாக இருந்தாலும் இஸ்ரேல் நாட்டில் முதன்முதலாக தற்போதுதான் திருநங்கை ஒருவர் கால்பந்து நடுவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.