வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:41 IST)

400க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்காத பிசிசிஐ!

பிசிசிஐ உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு இன்னும் ஊதியம் வழங்கவில்லை என சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு போட்டிகளான ரஞ்சி உள்ளிட்ட தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அதில் பங்கேற்க இருந்த ஊழியர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடந்து முடிந்தது.

அதில் பணிபுரிந்த 400க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு 2 மாதங்களுக்கும் மேலாக இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. வழக்கமாக 3 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படும் நிலையில் இந்த முறை 2 மாதமாகியுள்ளது அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.