வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (21:19 IST)

ரூ.16.5 லட்சத்தில் நாய்க்கு சொகுசு வீட்டை பரிசளித்த யூடியூபர்

dog house
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் தான் செல்லமாக வளர்த்து வரும்  நாய்க்கு ஒரு வீட்டை பரிசளித்துள்ளார்.

இந்த உலகின் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சொத வீட்டு கட்டிக் குடிபுக வேண்டும் என்பது லட்சியமாகவே இருக்கும். அதிலும் வாடகை வீட்டில்  குடியிருப்போர் இதை அடிக்கடி நினைத்துக் கொண்டிருப்பர்.

இந்த  நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ரிவேரா தன் வீட்டில் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்த  வந்த நிலையில் அந்த நாய் இறந்துபோனது.

இதனால், நாய் இறந்த வேதனையில் இருந்த அவர் சார்லி என்ற பெயரில் மற்றொரு நாயை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில்,  சார்லியின் முதல் பிறந்த நாள் பரிசாக தன் வீட்டிற்கு அருகில்  ரூ.16.5 லட்சத்தில் ஒரு சொகுசு  வீடு கட்டி அதை பரிசளித்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.