1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (19:41 IST)

10 நிமிடத்தில் ஒன்றரை லிட்டர் கோலா குடித்த இளைஞர் மரணம்!

பத்து நிமிடத்தில் ஒன்றரை லிட்டர் கோலாவை குடித்த இளைஞர் ஒருவர் திடீரென மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சீனாவை சேர்ந்த பெய்ஜிங் என்ற நகரத்தில் உள்ள இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் நண்பர்களிடம் தான் பத்தே நிமிடத்தில் ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை குடித்து விடுவதாக சவால் விட்டார்
 
இதனை அடுத்து அவர் அந்த கோக்கை குடித்த ஒரு சில நிமிடங்களில் வயிற்று வலியால் சுருண்டு விழுந்தார். அவரை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் 
 
பத்தே நிமிடத்தில் ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை குடித்த இளைஞர் ஒருவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது