1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:49 IST)

ஜெயிலுக்குப் போனா மூன்று வேலை சாப்பாடு கிடைக்கும்… போலிஸ் கார் மீது கல்வீசிய இளைஞர்!

கேரளாவைச் சேர்ந்த பிஜு என்ற இளைஞர்தான் இந்த சம்பவத்தில் இரண்டு முறை ஈடுபட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் பிஜு. இவர் பல இடங்களில் வேலை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. அதனால் பசி கொடுமையால் மன விரக்தி அடைந்த அவர் ஆற்றிங்கல் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் முன் நின்ற வாகனத்தின் மீது கல்வீசி தாக்கியுள்ளார்.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சில மாதங்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் வெளியே வந்த அவர் பல இடங்களில் வேலை தேடியுள்ளார். ஆனால் எங்குமே வேலை கிடைக்காததால் மறுபடியும் காவல் நிலையத்தின் முன் நின்ற வாகனத்தில் கல்வீழு தாக்கியுள்ளார்.

இது சம்மந்தமாக போலிசார் அவரை பிடித்து விசாரணை செய்த போது சிறைக்கு சென்றாலாவது மூன்று வேலை உணவு கிடைக்கும் என்பதால் இப்படி செய்ததாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்