1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 15 ஜூலை 2017 (15:30 IST)

இணைய வக்கிரம்: 12 வயசு சிறுமியை உடலுறவுக்கு அழைத்த இளைஞன்!

இணைய வக்கிரம்: 12 வயசு சிறுமியை உடலுறவுக்கு அழைத்த இளைஞன்!

சமூக வலைதளம் மூலமாக 12 வயது சிறுமி ஒருவருடன் நட்பாக பழகிய 24 வயது இளைஞன் ஒருவன் அந்த சிறுமியை உடலுறவுக்கு அழைத்த சம்பவம் இங்கிலாந்தின் நார்த் ஷீல்ட் பகுதியில் நடந்துள்ளது.


 
 
பிரசாத் என்ற 24 வயது இளைஞன் சமூக வலைதளத்தில் 12 வயது சிறுமி ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளான். இந்நிலையில் அந்த சிறுமியை உடலுறவுக்கு அழைத்து மெட்ரோ ரயில் நிலைத்துக்கு வருமாறு அழைத்துள்ளான்.
 
ஆனால் அந்த சிறுமி குழந்தைகளை பாலியல் கொடுமையில் ஈடுபடுத்தும் நபர்களை கண்காணிக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளார். இது அந்த இளைஞருக்கு தெரியாது. இதனையடுத்து பிரசாத் பற்றிய தகவலை அந்த சிறுமி போலீசாருக்கு அளித்துள்ளார்.


 
 
அதன்படி குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்கு சென்ற போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். அந்த இளைஞர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் அதிகாரிகள் அவனை விடவில்லை. பிரசார்த்துக்கு நீதிமன்றம் அபராதம் மற்றும் பாலியல் குற்றவாளிகள் பெயர் அடங்கிய பதிவில் ஐந்து ஆண்டுகளுக்கு கையெழுத்திட உத்தரவிட்டது. தற்போது அந்த சிறுமிக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி உடலுறவுக்கு அழைத்த ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.