வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (16:19 IST)

முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த இளைஞர்.. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு கைது..!

முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த இளைஞர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டது மட்டுமன்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. \

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் 27 வயதான கார்னியர் என்ற பயணி முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் விமானத்தில் ஏறினார். இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவரது தலையில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்ததால் விமான பணியாளர்கள் அவரை வெளியேற வலியுறுத்தினர்.

ஆனால் அவர் வெளியேறாமல் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் வந்திருந்த பிளாங்கா என்ற பயணியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் விமான நிலைய ஊழியர்கள் காவல்துறையை அணுகினர்.

இதனை அடுத்து விமானத்திற்குள் வந்த காவல்துறையினர் கார்னியர் மற்றும் அவருடன் வந்த பயணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். முன்னதாக அவருக்கு தலையில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்ததால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்று விமான நிலைய ஊழியர்கள் கூறியதை கார்னியர் ஏற்காததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.


Edited by Mahendran