உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் பலி
கென்யாவில் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகமான சூடான் வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் விலங்குகள் காப்பகத்தில் வாழ்ந்து வந்த சூடான் எனும் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகத்திற்கு நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அதை காப்பாற்ற கால்நடை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சூடான் காண்டாமிருகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
ஆண் வெள்ளை காண்டா மிருகமான சூடான் இறந்ததையடுத்து உலகில் 2 பெண் வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. சூடானின் உயிரணுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்து வெள்ளை காண்டாமிருகத்தின் எண்ணிக்கையை உயர்த்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.