செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (20:53 IST)

ஈரோட்டில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வீட்டில் எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள தயிர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (45). இவரது கணவர் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு தனுஷ்யா (18), பவித்ரா (13) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
 
இந்நிலையில்  ஜெயமணி வீட்டில் இன்று காலை திடீரென சிலிண்டர் வெடித்தது.  தகவலறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது வீட்டின் கழிவறையில் தாய், மகள்கள் பிணமாக கிடந்தனர். 
 
சிலிண்டர் வெடித்தபோது ஜெயமணியின் கணவர் வீட்டில் இல்லை. எனவே இது கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.