வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (08:47 IST)

ஹாங்காங் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நாடுகள்! – கடுப்பான சீனா!

ஹாங்காங் மீது சீனா கொண்டு வர உள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் உறுப்பினர்கள் பதவி நீக்கத்திற்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளதால் சீனா சிக்கலை சந்தித்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக செயல்பட்டு வரும் ஹாங்காங்கை முழுவதுமாக கட்டுப்படுத்த சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறத். சமீபத்தில் சீனா கொண்டு வந்த தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஹாங்காங் மக்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாங்காங் சட்டசபை உறுப்பினர்களை சீனா பதவி நீக்கம் செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நீக்கும் அதிகாரம் சீனாவிற்கு கிடையாது என கண்டனம் தெரிவித்துள்ளன. ஹாங்காங் விவகாரத்தில் உலக நாடுகளின் தலையீடு சீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது