புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (07:35 IST)

உலக கொரோனா பாதிப்பு: 2.35 கோடியை தாண்டியதால் பரபரப்பு

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டுவித்து வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் 2 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரத்து 626 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் கொரோனோ பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.60 கோடியாக உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களில் 66 லட்சத்து 90 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
அமெரிக்காவில் மட்டும் கொரோனாவிற்கு 58,74,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அந்நாட்டில் கொரோனாவில் இருந்து 31,67,028 பேர்  அமெரிக்காவில் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 1,80,604 பேர் அமெரிக்காவில் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 36,05,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பிரேசிலில் 27,09,638 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் 1,14,772 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, பிரேசிலை அடுத்து கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனாவிற்கு  31,05,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 23,36,796 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பதும், இந்தியாவில் 57,692 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.